ட்ரெண்டாகும் "பேட்மேன் சேலஞ்ஜ்" நாப்கின்களுடன் போஸ் கொடுக்கும் சினிமா ஸ்டார்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாம் எடுக்க வேண்டிய படம்.. பாலிவுட்டில் எடுத்துவிட்டார்கள்- வீடியோ

  சென்னை: பேட் மேன் சேலஞ்ஜை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பலரும் நாப்கின்களுடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.

  இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்மேன். தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கண்டுபிடிப்பை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

  அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர்.

  சாதனை தமிழர்

  சாதனை தமிழர்

  மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.

  இந்தியில் பேட்மேன்

  இந்தியில் பேட்மேன்

  அருணாச்சலம் முருகானந்தம் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கெளரவித்துள்ளது. இந்நிலையில் அவரது கதையை தழுவி இந்தியில் பேட் மேன் என்ற படம் தயாராகியுள்ளது.

  நாப்கின்கள் விழிப்புணர்வு

  நாப்கின்கள் விழிப்புணர்வு

  அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மாதவிடாய் காலத்தின் போது பெண்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாராகியுள்ளது.

  ட்ரெண்டாகும் பேட்மேன்

  ட்ரெண்டாகும் பேட்மேன்

  இதனை முன்னிட்டு பெண்களுக்கு சுகாதாரம் அளிக்கும் வகையில் திரை நட்சத்திரங்கள் பலரும் பேட்மேன் சேலஞ்ஜை ட்ரெண்டாக்கியுள்ளனர். இதற்காக நாப்கின்களுடன் அவர்கள் போஸ் கொடுத்து வருகின்றனர்.

  நாப்கினுடன் போஸ்

  இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நாப்கினுடன் போஸ் கொடுக்கும் போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம் என்றும் அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

  சேலஞ்ஜில் சிந்து

  பேட்மிண்டன் வீராங்கணை பிவி சிந்தும் பேட்மேன் சேலஞ்ஜில் இணைந்து நாப்கினுடன் போஸ் கொடுத்துள்ளார்.

  வைரலாகும் போட்டோக்கள்

  இதேபோல் நடிகர் நடிகைகள் பலரும் இதேபோல் பேட்மேன் சேலஞ்ஜிற்கு ஆதரவாக நாப்கினுடன் போஸ் கொடுத்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் நாப்கின்களுடன் போஸ் கொடுக்கும் படங்கள் வைரலாகி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Cinema stars giving pose with napkin for padman challege. padman challege is trending in India.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற