தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவி தானாக வரும்: எடப்பாடி பழனிச்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவி தானாக வரும் என பல்லடத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லடத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 CM Edappadi palanisamy participation in MGR Century function in tirupur

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவி தானாக வரும். உழைப்பவர்கள் திருப்பூர் வந்தால் வேலை நிச்சயம். திரை உலகில் புகழின் உச்சத்தை தொட்டதை போல் அரசியலிலும் புகழின் உச்சத்தை தொட்டவர் எம்.ஜி.ஆர்.

உலகிலேயே மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தை பயன்படுத்தியவர் எம்.ஜி.ஆர் தான். அவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு தொழிலாளியாக நடித்துள்ளார். சத்துணவு திட்டத்திற்கு இணையாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சாய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. திருப்பூரில் ரூ.43 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகள் இந்தாண்டு நிறைவு பெறும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் டெண்டர் விடப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கப்படும். 30 மாதங்களில் இந்த நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
chief minister Edappadi palanisamy participation in MGR Century function in tirupur.
Please Wait while comments are loading...