For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவேகானந்தர் பாறைக்கு 120 கோடியில் பாலம்.. குமரி மாவட்டத்திற்கு பல திட்டங்களை அறிவித்த முதல்வர்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட தலைநகர், நாகர்கோவிலில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அங்கு பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் நகராட்சி, இனி மாநகராட்சியாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதுதவிர, அவர் கூறியதன் முக்கிய அம்சங்களை பாருங்கள்.

CM Edappadi Palanisamys announcements for Kanyakumari district

* ஒகி புயலால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு வழங்கி உள்ளது

* மும்மதங்கள் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது

* கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.31.34 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

* புதிய வருவாய் வட்டமாக கிள்ளியூர் உருவாக்கப்படும்

* இனையம் துறைமுகத்தில் தூண்டில் பாலம் அமைக்கப்படும்

* கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் 150ஆக உயர்த்தப்படும்

* கன்னியாகுமரியில் 20 சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்

* விவேகானந்தர் பாறைக்கு செல்ல 2 படகுகள் வாங்கப்படும்

* ரூ.120 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டப்படும்

இவ்வாறு முதல்வர் தனது பேச்சின்போது தெரிவித்தார். காற்று வீச்சு அதிகமாக இருந்தாலே, விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கும். எனவே பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம், குமரி முனையில் கருணாநிதி அரசால் உருவாக்கப்பட்ட 133 அடி திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
CM Edappadi Palanisamy announce many welfare schemes for Kanyakumari district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X