எழிலனுக்கு புதிய பொறுப்பு.. அப்பா பணியாற்றிய குழுவிலேயே பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! ஆஹா!
சென்னை : மாநில திட்டக்குழு உறுப்பினராக திமுக எம்.எல்.ஏ டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் நாகநாதன். இப்போது, அவரது மகனுக்கு திட்டக் குழுவில் பொறுப்பு கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1971ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக்குழு :
முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு மாநில திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. மாநிலத் திட்டக் குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சீனிவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
எழிலன் நாகநாதன் :
இந்நிலையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்த, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சரான நிலையில், எழிலன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன், மருத்துவர். திராவிட இயக்க சிந்தனையாளரான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில் கருணாநிதி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கருணாநிதியின் உடல்நிலையை உடனிருந்து கவனித்து வந்தார்.

எழிலனின் அப்பாவும் :
எழிலன் நாகநாதனின் தந்தையான பேராசிரியர் நாகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நாகநாதனின் மகன் டாக்டர். எழிலனுக்கு திட்டக்குழுவில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஒவ்வொரு முறை பேச்சு எழும்போதும் எழிலன் அமைச்சராக்கப்படுவார் என்ற குரல்களும் எழும், ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் தற்போது முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications