நெல் கொள்முதல் விவகாரம்.. எடப்பாடி விரக்தியின் உச்சத்தில் இருக்காரு.. டேட்டாவுடன் வந்த ஸ்டாலின்!
தென்காசி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், திமுக ஆட்சியில் செப்டம்பர் மாதம் முதலே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே சிறுமிகள் சிலம்பம் சுற்றியதை பார்த்த ஸ்டாலின், அவர்களிடம் கம்பை பெற்று சில நிமிடங்கள் சுற்றினார்.

இதன்பின் ஆயக்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதன்பின் தென்காசி மாவட்டத்தில் புதிதாக 10 திட்டங்களை அறிவித்து ஆச்சரியம் கொடுத்தார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், தூறலும் சாரலும் கொண்டது தென்காசி மண். திமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார். நாள்தோறும் ஏதாவது ஒரு அவதூறு செய்தியை பரப்புகின்றனர். நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறாக தகவலை பேசி வருகிறார்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை, ஒரு நெல்மணி கூட வீணாகிவிடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். முந்தைய ஆட்சி காலத்தை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளிடம் இருந்து 1.7 கோடி மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 42 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அக்டோபரில் தான் நெல் கொள்முதல் தொடங்கியது. ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தான் விவசாயிகளுக்கு எதிரான 2 வேளாண் சட்டங்களை ஆதரித்தார். இது எதுவும் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை புரோக்கர் என்று விமர்சித்தவர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சிக்கு வந்த பின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு நிதி தராவிட்டாலும், தமிழ் மக்களை காப்பது தான் திராவிட மாடல் அரசின் கடமை.
திமுக ஆட்சிக்கு வந்தபின் 3 முறை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. அதனை சரிசெய்ய ரூ.37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கோரினோம். ஆனால் இதுவரை அந்த நிதி அளிக்கப்படவில்லை. யார் என்ன தொல்லை கொடுத்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்!











Click it and Unblock the Notifications