அடேங்கப்பா கோவை போலீஸ்.. ஹெல்மெட் போடவில்லை என்று யாருக்கு அபராதம் விதித்தார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை : டாடா ஏஸ் வாகன ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று காவல்துறையினர் அபராதம் விதித்து ரசீது அளித்துள்ளது அம்பலமகியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள வள்ளல் பாலா நகரைச் சேர்ந்த கருணாகரன் டாடா ஏஸ் வாகன டிரைவராக உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி சரக்கு ஆட்டோவில் காருண்யாநகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ, கருணாகரனிடம் ஏன் சீருடை அணியவில்லை என்று கேட்டுள்ளார்.

 Coimbatore traffic police fined Tata ace driver for not wearing helmet while driving

அதற்கு டிரைவர் கருணாகரன் நான் காருண்யா நகர் காவல்நிலையத்திற்கு இலவச குடிநீர் கேன் சப்ளை செய்து வருகிறேன், என்னிடம் யூனிபார்ம் எங்கே எனக் கேட்டால் இனி தண்ணீர் விநியோக்க மாட்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த எஸ்ஐ கருணாகரனுக்கு பணி நேரத்தில் சீருடை அணியவில்லை என்று டிரைவர் கருணாகரனுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

ஆனால் போலீசார் பராமரிக்கும் பதிவேட்டில் சரக்கு வாகன டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என்று ரசீது கொடுத்துள்ளார். சரக்கு வண்டி டிரைவர் ஹெல்மெட் போடவில்லை என்று போலீசார் அபராதம் விதித்ததாக கேலி செய்து சமூக ஊடகங்களில் இந்த ரசீது பரவியது.

இதனையடுத்து காவல்துறை உயர்அதிகாரிகள் இது குறித்து எஸ்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அபராத் தொகை எழுதும் போது கவனக்குறைவால் ஹெல்மெட் இல்லாமல் வந்ததாக எழுதிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் ரசீது கொடுக்கும் சீட்டில் சீருடை அணியாமல் வந்ததாலேயே அபராதம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore police fined TATA Ace driver for not wearing helmet, the receipt by Police went viral on social media, after that police explains by mistaken it was carried like that.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற