கோவையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு- 2 என்ஜினியர்கள் கைது
கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற இரண்டு என்ஜினியர்களைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரது மனைவி சாதனா(29). நேற்று காலை கணவன், மனைவி இருவரும் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கணவர் மற்றும் அவரது தாய் ஒரு பைக்கிலும், சாதனா தனியாக தன்னுடைய 'ஸ்கூட்டி'யிலும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
‘நவஇந்தியா' ஸ்கீம் ரோடு அருகிலுள்ள பி.எஸ்.ஜி. கல்லுாரி அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சாதனாவின் கழுத்திலிருந்த நான்கரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
சாதனாவின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியில் சென்றோர் பைக் ஆசாமிகளை துரத்திப் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகையை பறித்தது சேலத்தை சேர்ந்த வைரமணி(23) மற்றும் நெய்வேலியை சேர்ந்த பாலாஜி(23) எனத் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் இருவரும் அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் கல்லுாரியில் மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ., டிப்ளமோ இன்ஜி., படித்தவர்கள் என்பதும், கிணத்துக்கடவிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications