சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன்... போலீசிடம் சிக்கினான்!
சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்த புதுக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் பட்டாகத்தி நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் நீக்கப்பட்ட திருவள்ளூர், அரக்கோணம் பகுதியை சேர்ந்த மாணவர்கள், சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் அரிவாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் புறநகர் ரயில்களில் அனைவர் முன்னிலையிலும் பட்டாகத்தியுடன் மாணவர்கள் சுற்றித் திரிந்தது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் இன்று மீண்டும் புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் பிரணீத் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளான். போலீசாரின் சோதனையின் போது பிடிபட்ட அவனிடம் நடத்திய விசாரணையில் வேறு ஒரு கல்லூரி மாணவனை தாக்குவதற்காக கத்தியை வைத்திருந்ததாக கூறியதையடுத்து பிரணீத்தை போலீசார் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications