காலேஜ் டீச்சரை.. "கூப்பிட்ட" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு

கல்லூரி பேராசிரியைருக்கு மாணவர் பாலியல் தொல்லை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: இந்த கொடுமையை பார்த்தீங்களா.. ஒரு டீச்சரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் கல்லூரி மாணவர்.. அப்பறம் என்ன? போலீஸ் தூக்கி அந்த மாணவரை உள்ளே வைத்துவிட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்... இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்... அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது.

College Student was arrested for calling college professor for sex in Tirupathur

பேராசிரியர் என்னவோ, சாதாரணமாகத்தான் பழகியிருக்கிறார்.. ஆனால், ராஜேஷ் புத்திதான் எல்லை மீறிவிட்டது.. அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார்.. ஆனால், ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்... அவருக்கு பின்னாடியே ராஜேஷ் சென்றார்.. குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார்.. மறுபடியும் அவரை உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார்.. அதற்கு பேராசிரியை மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

மேலும் டீச்சரை இப்படி அப்படி நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்.. இதனால் வேறு வழியின்றி பேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+