For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணினி ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்குமா… அரசுப் பள்ளிகளில் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

கணினி ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்கக் கோரி வரும் 7ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பில்நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டத்தை கணினி ஆசிரியர்கள் வரும் 7ம் தேதி நடத்த உள்ளனர்.

கணினி அறிவியல் படத்தை 6வது பாடமாக ஆக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கணிப்பொறி பாடத்தை 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்.

Computer teachers will stage a protest on May 7th

பி.எட். கணினி படித்து முடித்துவிட்டு அரசு கணினி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்; சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

English summary
Computer teachers association will stage a protest for demanding recruit in government schools on May 7th .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X