ஸ்டெர்லைட்.. வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
வாஞ்சிநாதனுக்கு மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் போராட்டதை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். அதேபோல, ஆலைக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகார அமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் பல்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளிலிருந்து முன்ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் அவரை கடந்த வாரம் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
அப்போது, தன்மீது பதியப்பட்ட வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்க கோரி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறையிலுள்ள வாஞ்சிநாதனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில்தான் தங்கியிருக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வேறு எந்த வழக்கிலும் வாஞ்சிநாதனை கைது செய்ய கூடாது என போலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications