பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே காங். நிலை- குஷ்புவுக்கு திருநாவுக்கரசர் பதிலடி
பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே காங்கிரஸ் நிலை; பொதுசிவில் சட்டத்தை செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆதரிப்பது அவரது சொந்த கருத்து என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே கட்சியின் நிலை; பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.
பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக சென்னையில் இன்று திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கவில்லை.
தற்போது ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் தூண்டுதலால் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி அடியோடு எதிர்க்கும்.
பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக நடிகை குஷ்பு கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications