ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும்.... இது ஈவிகேஎஸ் இளங்கோவன் விருப்பம்
கும்பகோணம்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என இளங்கோவன் கூறி வருகிறார். ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன.

இதனிடையே கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் விருபுகிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் ராகுல்காந்திதான் எங்கள் முதல்வர் வேட்பாளர்.
ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர். சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மேலிடம் விரைவில் முடிவு செய்யும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications