ஸ்ரீராஜா சொக்கரை மாற்றுங்கள்: போர்க்கொடி தூக்கும் சிவகாசி காங்கிரஸார் !
விருதுநகர்: சிவகாசி சட்டசபை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீராஜா சொக்கரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதி ஒன்று மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இக்கட்சியின் வேட்பாளராக சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.சொக்கர் மகன் ஸ்ரீராஜாவை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அவருக்கு பதிலாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கணேசனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
சிவகாசியைச் சேர்ந்த கணேசன் கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த தொகுதிக்கு 13 பேர் விருப்ப மனு அளித்தனர். அவர்களில் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அநியாயம் இழைத்து விட்டீர்கள் என காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைமை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஸ்ரீ ராஜாவை மாற்றி கணேசனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையேனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவோம். இந்த மாவட்டத்தில் உள்ள 7 தொகுதியிலும் தேர்தல் பணி செய்ய மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications