தனித்து விடப்பட்ட காங்கிரஸுக்கு இது சோதனையான காலகட்டம்தான் - ப சிதம்பரம்

சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:
அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்டும். தேர்தலில் எப்படி செயல்படுவது என்பதுதான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை.
பா.ஜ.க. ஒரு புதிய தலைவரை முன்னிலைப்படுத்தி வேகமாக காரியங்களை செய்து வருகிறது. அதை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரு முகம். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பல முகங்கள் உள்ளன. அதில் அரசியல் முகம்தான் பா.ஜ.க.
இன்று நமக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டியில்லை. நமக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தான் போட்டி என்ற நிலை. ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்க்கும் சக்தி காங்கிரசாரான உங்களிடம் இருக்கிறது. நமக்கு எதிராக வலதுசாரிகள், ஆதிக்க சக்திகள் உள்ளன.
அடுத்து வருவது காங்கிரசுக்கு யுத்த காலம். இதில் வெற்றிபெற வேண்டும் என்றால் மிக, மிக நுண்ணிய முடிவு எடுக்க வேண்டும்.
இன்றைய கூட்டத்தில் இந்த தேசத்திற்கு எதிரான சோதனைகளை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன். ஆதிக்க சக்திகளை விரட்டுவதுதான், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
புதியவர்கள் வரும்போது, முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும். நமது கட்சியில் இளைஞர்களே அதிக அளவில் இல்லை. அவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பதவி வழங்க வேண்டும்.
பொதுவாக தலைமையில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பேசத் தெரியவேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நன்கு எழுதப்பேச தெரிந்தவர்களாக இருப்பார்கள். தற்போது நமது அகில இந்திய தலைவர்களும் பேசுகின்றனர். எல்லா நிலையிலும் நன்கு பேச, எழுத தெரிந்து கொள்ள வேண்டும். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுகோப்போடு இருந்து பாடுபட வேண்டும்," என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications