ஆளுநருக்கு ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை ஈயடிச்சான் காப்பியாக அனுப்பிய காங்கிரஸ்- வைரலாகும் லெட்டர்!
ஆளுநருக்கு இன்று காங்கிரஸ் அனுப்பிய கடிதம் சர்சையாகி உள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமியும் ஆளுநருக்கு இதை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவெனில் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தின் வரிகளை ஒருவரி மாற்றாமல் அப்படியே ஈயடிச்சான் காப்பியாக காங்கிரஸ் கட்சியும் அனுப்பியுள்ளது என்பதுதான் சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்கிற இடத்தில் காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி என மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி நல்ல தோழமை கட்சியாக இருக்கலாம்... அதற்காக அப்படியே காப்பியடிச்சா கட்சியோட இமேஜ் என்பது என்னவாகிறது என கொதிக்கிறது கதர் தொண்டர்கள் குரூப்.
ஸ்டாலின் கடிதமும் காங்கிரஸ் ராமசாமியின் கடிதமும்:
ஆளுநருக்கு ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை ஈயடிச்சான் காப்பியாக அனுப்பிய காங்கிரஸ்- வைரலாகும் லெட்டர்! pic.twitter.com/haDPsDbx3X
— Oneindia Tamil (@thatsTamil) August 23, 2017


Click it and Unblock the Notifications
