திராவிட கட்சிகளின் தாய்வீடு- மோடி மஸ்தான்- பந்தய குதிரை: விருதுநகரில் கலக்கிய 'காங்'. குஷ்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: திராவிட கட்சிகள் உள்பட இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திரிக்க நேரம் அதிகமாகும். ஆனால் பந்தயக் குதிரை. கீழே விழுந்தால் மறு நிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை என்றும் அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

விருதுநகரில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார். திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும்.

Congress Party is the Mother of Diravidan party says Kushboo

காங்கிரஸ் கூட்டம் என்றாலே அவ்வளவாக ஆர்வம் காட்டாத பொதுமக்களும், குஷ்பு பங்கேற்றதால் எப்போதும் இல்லாத வகையில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் குஷ்புவை பார்த்த உற்சாகத்தில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் கூட்டத்தைப் பார்த்து மேலும் உற்சாகமடைந்தனர்.

தமிழ்நாட்டு மருமகள்

தனது வழக்கமான உற்சாகத்துடன் பேச்சை தொடங்கிய குஷ்பு, "வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு மருமகளாகி தமிழ் கத்துக்கிட்டு தப்பு இல்லாமல் ஒரளவு தமிழ் பேசுறேன்னு சொன்னால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் மறைந்த தலைவர் காமராஜரும், பாரதியாரும் சந்தோஷப்படுவார்கள் என்று சென்டிமெண்ட் டச் கொடுக்கவே கூட்டத்தில் விசில் பறந்தது.

கட்சி மாறியது ஏன்?

கர்மவீரர் காமராஜர் பிறந்து வளர்ந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். எல்லோரும் ஏன் கட்சி மாறீனீர்கள் என்று கேட்கின்றனர். நம்முடைய நல்ல கொள்கைகளை மாற்றிக்கொள்வது நல்லதா அல்லது நம்முடைய நல்ல கொள்கைகளுக்கு இடம் தராத கட்சியில் இருப்பது நல்லதா?.

பணம் சம்பாதிக்க வரவில்லை

நான் அந்த கட்சியில் இருந்து மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப் போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. ( யாரை சொன்னார் குஷ்பு).

காங்கிரஸ் கட்சியில் ஏன்?

பிறகு காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நமக்கு பேச்சுரிமை, கருத்துரிமையைப் பெற்று தந்தது காங்கிரஸ் கட்சி. நான் இன்றைக்கு சுதந்திரமாக எனது கருத்தை தைரியமாகப் பேசுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.

அரசியல் கட்சிகளின் தாய்வீடு

இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான். இதில் இருந்துதான் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் எல்லாம் வந்தது. ஏன் தமிழகத்தில் கூட திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் எல்லாம் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவைதான்.

ஆணிவேர் காங்கிரஸ்

தி.க., எதில் இருந்து வந்தது. நீதி கட்சியில் இருந்து வந்தது. அந்த நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது. எனவே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆணி வேர் காங்கிரஸ் கட்சிதான். இதை யாராவது மறுக்க முடியுமா. அப்படி மறுத்தால் இப்பவே என் பெயரை மாற்றிக்கொண்டு இந்த மேடையை விட்டு போய் விடுகிறேன்.

எதையும் செய்யலையே

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது. பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலின்போது என்ன சொன்னார்கள். காஷ்மீர் பிரச்னையை தீர்ப்போம், சேது சமுத்திர திட்டம், கறுப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரைக்கும் எதையாவது செய்திருக்கிறார்களா?

மோடி மஸ்தான்

மோடி மஸ்தான் வேலை காட்டி ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி, மக்களை பற்றி சிந்திக்காமல் ஆஸ்திரேலியா, பிரேசில், பூடான் என்று உலக நாடுகளில் சுற்றுலா சென்று வருகிறார்.

மகத்தான சக்தி

இந்தியாவில் தூங்கிக்கொண்டிருககிற மக்களை எழுப்பி சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறது.

பந்தயக்குதிரை

காங்கிரஸ் கட்சி தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திரிக்க நேரம் அதிகமாகும். ஆனால் பந்தயக் குதிரை. கீழே விழுந்தால் மறு நிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை. அது சீக்கிரம் எழுந்து நாட்டைக் காக்கும்.

2016ல் காங்கிரஸ் ஆட்சி

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க எல்லோரும் பாடுபடுவோம். கண்டிப்பாக நமது லட்சியம் நிறைவேறும்.

உற்சாக விசில்

மைக் பிடித்தது முதல் அதிரடியாகவும் உற்சாகத்துடனும் குஷ்பு பேசியது கண்டு கூட்டத்தில் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிர்ந்தது. இதைக்கண்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே நடப்பது நம் கட்சி கூட்டம்தானா? என்ற சந்தேகம் வந்தது. இதனால் கூடுதல் உற்சாகமாக இருந்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள்

ரஜினியின் பேச்சு

பாபா பட தோல்விக்கு பின்னர் சந்திரமுகி பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பேசிய ரஜினி, "தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. நான் யானை அல்ல; குதிரை. கீழே விழுந்தாலும் சட்டென எந்திரிச்சிடுவேன். எனவே மீண்டும் வீரத்தோடு வருகிறேன்" கூறியிருந்தார். அதனை நினைவூட்டும் வகையில் குஷ்பு உதாரணம் காட்டி பேசியதும் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியது.

இன்னொரு ஜெயலலிதா

திமுகவில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது குஷ்புவிற்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால் பொதுக்கூட்டத்தில் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் அங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. இங்கு கூடிய கூட்டத்தை கண்ட அரசியல் நோக்கர்கள் தமிழகத்தில் இன்னொரு ஜெயலலிதாவாக குஷ்பு உருவாகிறாரா என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+