வேட்டிக்கு அனுமதி மறுப்பு- சிறை நிரப்பும் போராட்டம்- அமெரிக்கை நாராயணன் அறிவிப்பு!
நெல்லை: சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி வருவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தென்காசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் 12 ஆயிரத்து 522 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பாதி ஊராட்சிகளில் 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருக்கும் வகையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.
ஏற்கனவே இரணடு மாவட்டங்களில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறோம். இது மூன்றாவது மாவட்டம் ஆகும்.
வேட்டி, சட்டை அணிந்தவர்களை கிரிக்கெட் கிளப்பில் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சிறை நிரப்பும் போராடடத்தை நடத்துவோம். அரசு உதவி பெறும் கிளப்புகளில் இதுபோல் வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுத்தால் அந்த கிளப்பின் அங்கிகாரத்தை அரசு ரத்து செய்யவேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது தலைவர் அய்யாத்துரை, செல்வராஜ், சக்திநாதன், தங்கராஜ், குருசாமி, சண்முகையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications