ஜெ.வுக்காக அன்று சீருடையுடன் மொட்டை... இன்று உண்ணாவிரதம்: அதிரடி கான்ஸ்டபிள்
தேனி: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் உடன் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர் தற்போது ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. கொடி பறந்த காரில் போலீஸ் சீருடையுடன் வந்த வேல்முருகன் ‘அம்மா வாழ்க' என்று முழக்கமிட்டபடி இறங்கினார்.
ஜெயலலிதா பெற்ற வெற்றிக்காக, சீருடையில் மொட்டை அடிக்கும் ஒரு அடிமை.....ராமானுஜம், அடிமையாகும்போது, அந்த உரிமை காவலருக்கு இல்லையா என்ன ?
Posted by Shankar A on Tuesday, June 30, 2015
திடீரென்று அவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்தார். இவருடன் வந்த சிலரும் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அங்கு வந்த போலீசார் வேல்முருகன் உள்ளிட்ட 10 பேரை வேனில் ஏற்றி, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீஸ்காரர் வேல்முருகன் 2 நாட்களாக பணிக்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதே வேல்முருகன்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றபின்னர், தேனியில் போலீஸ் சீருடை அணிந்தபடி மொட்டை போட்டு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மோடி - ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையில் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications