டெல்டா மாவட்டங்களில் இரவில் இருந்து மழை.. மக்கள் வீட்டில் முடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் அதிகாலையில் மற்ற சில இடங்களிலும் மழை தொடங்கி இருக்கிறது.

இந்திய பெருங்கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு இழந்தது. ஆனாலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்து இருந்தது.

Continuous rain in Delta region of TN

இந்த நிலையில் இன்று இரவில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலூர், நாகை மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்தது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. கடலூர் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்கிறது.

இரவில் இருந்து பெய்துவரும் மழை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Continuous rain in Delta region of TN. Rain starts pouring from yesterday night in Nagapattinam, Kumbakonam, Thranagamppadi, Cuddalore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X