கருணாநிதி மறைவு.. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக நீதி, ஏழை, எளியோரின் முன்னேற்றத்திற்கான அரசியல் மற்றும் அறிவுசார் தலைவராக எழுந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திமுக தலைவர் கருணாநிதி மறைவு மிகப்பெரும் இழப்பு என்று ஃபேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவிட்டு இதய அஞ்சலி தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் ஃபேஸ்புக் பதிவில், "எழுபதாண்டுகளாக பரிணமித்துவரும் இந்திய, தமிழக அரசியலுக்கு வளம்மிக்க சகாப்தத்தை விட்டுச் சென்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. சமூக நீதி, ஏழை, எளியோரின் முன்னேற்றத்திற்கான அரசியல் மற்றும் அறிவுசார் தலைவராக எழுந்தவர் அவர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து செயல்பட்டுள்ளேன். பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் இந்திய பன்முகத்தன்மை குறித்து அவரிடம் கற்றவை ஏராளம்.
பெரும் வெறுமையை விட்டுச் செல்கிறார். மிகப்பெரும் இழப்பு. இதய அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications