கடலூர் விக்னேஷுக்கு இது மறக்க முடியாத நவராத்திரி...!
Recommended Video

சென்னை: கடலூரிலிருந்து நமது அன்புக்குரிய வாசகர் கே. விக்னேஷ் நவராத்திரி கொலு படங்களை அனுப்பி வைத்துள்ளார். ஒன்இந்தியா தமிழ் குடும்பத்து விசேஷமாக இதை உணர்கிறோம்.
விக்னேஷ் சமீபத்தில்தான் திருமணமானவர். தனது மனைவியுடன் இணைந்து முதல் நவராத்திரியை வரவேற்கிறார். இவரது குடும்பத்தில் இது 10வது நவராத்திரி கொலுவாகும். இதை சந்தோஷத்துடன் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்னேஷ்.
கடலூர் வள்ளலார் நகர் பகுதியில் வசித்து வரும் விக்னேஷ் குடும்பத்தில் ஆண்டு தோறும் சிறப்பாக நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த முறை தங்களது கொண்டாட்டங்களை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. !

பெண்களைப் பெருமைப்படுத்தும் விழா
நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமே அது பெண்களை பெருமைப்படுத்தும் விழா என்பதுதான். இந்திய பாரம்பரியமே பெண்மையை உயர்த்திப் பிடிப்பதுதானே. அநத் வகையில் நவராத்திரியன் முக்கிய நோக்கமும் அதுவே.

குடும்பத்தின் ஆணிவேர்
குடும்பத்தின், சமூகத்தின் ஆணிவேரே பெண்கள்தான். பெண்களை மதிக்காத சமுதாயம் எப்போதும் பின் தங்கியே இருக்கும். பெண்களைப் போற்றும் சமுதாயமும், குடும்பமும் உயர்வுகளைப் பெறும்.

மனைவிக்கு வரவேற்பு
இந்த முறை தனது அப்பா, அம்மாவுடன், தனது புது மனைவியையும் வரவேற்பதாக பெருமிதத்துடன் கூறுகிறார் விக்னேஷ். தனது வீட்டு நவராத்திரி கொலு புகைப்படங்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

என்னென்ன இருக்கு கொலுவில்
விக்னேஷ் வீட்டில் வைத்துள்ள கொலுவில் அஷ்டலட்சுமி, நவராத்திரி தேவிகள், தசாவதாரம், சீதா கல்யாணம், சிவன் மீனாட்சி, விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரது பொம்மைகள் உள்ளன.

கண்கவர் காட்சிகள்
ஸ்ரீரங்கம் கோவில், ஆண்டாள் ரங்கநாதர் ரங்கநாயகி, ராமானுஜர், சீதா ராம லட்சுமண ஆஞ்சநேயர், பூங்கா, கிருஷ்ண லீலை, கல்யாண வீடு, தேவி கலசம் என ஏகப்பட்ட தெய்வ, காட்சி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
விக்னேஷ் குடும்பத்துக்கு நவராத்திரி விழா வாழ்த்துகள்..!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications