வனத்துறையினரின் அலட்சியம்... குரங்குகள் கடித்து பள்ளி மாணவி காயம்
கம்பம்: கூடலூர் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பள்ளிமாணவியை குரங்குகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூண்டுகள் வைத்து வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்காததே இச்சம்பவத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூடலூர் நகர குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 குரங்குகள் புகுந்தது . வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களையும், சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்து கொண்டு இக்குரங்குகள் ரகளை செய்து வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
உடனடியாக குரங்குகளைப் பிடித்துச் செல்லும்படி, வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கூடலூர், சக்கனநாயக்கர் தெருவை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 7 வயது மகள் பிருந்தா குரங்குகளின் தாக்குதலுக்கு ஆளானார். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது, குரங்குகள் பாய்ந்து அவரது தலைமுடியை இழுத்து உடலில் பிராண்டின.
பிருந்தாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் ராமலட்சுமி குரங்குகளை விரட்டி சிறுமியை மீட்டார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் பிருந்தா. இதே போன்று குரங்குகளின் பிடியில் சிறு குழந்தை சிக்கியிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்தான போயிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இனிமேலாவது குரங்குகள் நடமாட்டத்தை தடுக்க கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் கூறும்போது, ‘முன்பு கூடலூர் வனசரகம் என்று ஒரே சரகமாக இருந்தது. தற்போது அது பிரிக்கப்பட்டு கம்பம் மேற்கு, கம்பம் கிழக்கு, கூடலூர் என 3 வனசரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எல்லை எந்த சரகத்தில் வரும் என்பதில் வனஅலுவலர்களிடையே பிரச்சினை உள்ளது. அதனாலேயே பிடிக்க முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications