ராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு!
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டினார்.
Recommended Video

மதுரை: ராஜபாளையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே பெண்ணை சரமாரியாக வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகராறு முற்றிய நிலையில், மனைவியை அரிவாளால் சரமாரியாக மதீஸ்வரன் தாக்கியுள்ளார். ராஜபாளையம் காவல்நிலையம் முன்னாலேயே இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அரிவாளால் வெட்டினால் பிரியா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிருக்கு போராடி வரும் பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் உடனடி விசாரணையை துவக்கியுள்ளனர். இதன் பின்னரே முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications