இரட்டை இலைச் சின்னம் வழக்கை வாபஸ் பெறணுமாம்.. சொல்கிறார் சிவி.சண்முகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச்சின்னம் வழக்கை ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெற வேண்டும் என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நலனுக்கு பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வரும் அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கான விசாரணையின் போது இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது . இதையடுத்து அதனை பெறுவதற்காக டிடிவி தினகரன சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கரிடம் லஞ்சம் கொடுத்து சிக்கிக்கொண்டார்.

ஒதுக்கப்பட்ட சசி குடும்பம்

ஒதுக்கப்பட்ட சசி குடும்பம்

இந்த வழக்கில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இரட்டைஇலைச் சின்னம் கிடைப்பதிலும் பெறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

சிவி சண்முகம் பதில்

சிவி சண்முகம் பதில்

இதைத்தொடர்ந்து இரு அணிகளும் இணைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மற்றும் சிவி சண்முகமும் பதிலளித்தனர்.

பிரமாணப் பத்திரங்கள் ஆணையத்தில்

பிரமாணப் பத்திரங்கள் ஆணையத்தில்

அப்போது பேசிய சிவி.சண்முகம் விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நலனுக்கு பாடுபட வேண்டும் என தெரிவித்தார். பிரமாணப்பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தான் விசாரணையில் உள்ளது.

வழக்கை வாபஸ் பெறனும்

வழக்கை வாபஸ் பெறனும்

இரட்டை இலைச்சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றாலே போதும் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் என அவர் கூறினார். எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்புடன் இணைய முயற்சிப்பது இரட்டை இலைச்சின்னத்துக்கே என்பதும தெளிவாகியுள்ளது.

தினகரனுக்காக வாபஸ் பெறனுமா

தினகரனுக்காக வாபஸ் பெறனுமா

தேர்தல் ஆணையத்தில் உள்ள இரட்டை இலை வழக்குக்காகத்தான் லஞ்சம் கொடுத்து டிடிவி தினகரன் நெருக்கடியில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்நிலையில் சிவி சண்முகம் ஓபிஎஸ் தரப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் வலியுறுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister CV Shanmugam urges that OPS team should withdraw their case from election commission. all should work for the party CV shanmugam said.
Please Wait while comments are loading...