ஓகி புயல்.... 2010ஆம் ஆண்டுக்குப் பின் பலத்த மழையை சந்திக்கும் தென் தமிழகம்- வெதர்மேன் #CycloneOckhi
கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகம் பலத்த மழையை சந்திக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது ரேடாரில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டிய கடற்கரையில் இந்த புயலானது செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறுவதால் கனமழை பெய்யக்கூடும் என பதிவிட்டுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
தயவு செய்து இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் கவனிக்கவும். இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே கடற்கரைப்பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பலத்தமழைக்கு வாய்ப்பு
புதன்கிழமை இரவு முதல் தொடங்கும் கனமழை நாளை தீவிரமடைந்து, மிக கனமழையாக மாறும். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை இருக்கும்.

பலத்தமழைக்கு வாய்ப்பு
புதன்கிழமை இரவு முதல் தொடங்கும் கனமழை நாளை தீவிரமடைந்து, மிக கனமழையாக மாறும். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மழை
இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாது, அருகே இருக்கும் விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் உள்மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்திலும் மழை இருக்கும், குறிப்பாக குன்னூர் பகுதியில் கிழக்குப்பகுதி பள்ளத்தாக்கு மிகப்பெரிதானது, இதனால், கன்னியாகுமரி கடல்பகுதியில் இருந்து அரேபியக் கடலுக்கு குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி நகரும்போது, ஈரப்பதம் காரணமாக கனமழை பெய்யக்கூடும்.

நெல்லை, குமரியில் மழை
கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் மிக, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள கொடையாறு, பேச்சிப்பாறை, குலசேகரம், நெல்லை பகுதியில் உள்ள பாபநாசம், மாஞ்சோலை பகுதியில் நல்ல மழை இருக்கும். ஒட்டுமொத்தமாக, தென் தமிழகம் அதன் உள்மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் பரவலாக மழை பெய்யப்போகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மன்னார் வளைகுடா, கேரளாவின் தென்பகுதி கடற்கரை பகுதிகளில் கடலுக்குள் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, மிகப்பெரிய அலைகள் உருவாகும்.

மறக்கமுடியாத மழை
2009ம் ஆண்டு உருவான பியான் புயல். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி கடலுக்கு நகர்ந்து, அரேபியகடல் பகுதியில் செல்லும் போது புயலாக மாறியது. அப்போது 820 மி.மீ மழை பெய்ததும், நீலகிரி மாவட்டம் குன்னூர் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதையும் யாரும் மறக்கமுடியாது. இப்போதுவரை ஒரே நாளில் 820மி.மீ மழை பெய்ததுதான் சாதனையாக இருக்கிறது.
2010 டிசம்பர் மாத மழை
என்னைப் பொருத்தவரை 2010ம்ஆண்டு டிசம்பர் போல இருக்கும்.
2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் கன்னியாகுமரி பகுதியில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்ந்தபோது, இந்தப்பகுதிகளில் மிக, கனமழை பெய்தது.
2014ம் ஆண்டு மே மாதத்திலும், கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து, லட்சத்தீவு கடற்பகுதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும்போது இதேபோன்ற மழை இருந்தது. கன்னியாகுமரி எனது சொந்த மாவட்டம் என்பதால், இந்த இரு சம்பவங்களையும் என்னால் மறக்க முடியாது.

புயல் எச்சரிக்கை
கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது ரேடாரில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மழையோடு பலத்த காற்று
சற்று முன் வெதர்மேன் தனது பதிவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டிய கடற்கரையில் இந்த புயலானது செல்லும் என்று அவர் கூறியுள்ளார். புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கூறியுள்ளார்.
கரையை கடக்கும் புயல்
புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடப்பது கன்னியாகுமரி பகுதியில் தெரியாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications