அடடா.. அடடா.. நீங்க கூட உங்க மனைவிக்கு இது போல பரிசளிக்கலாமே...?
சென்னை: டாக் ஆப் தி டவுன் என்பார்கள்.. இன்று டாக் ஆப் தி நேஷனாக மாறியுள்ளது வெங்காயம். வெங்காயத்தின் விலையைக் கேட்டு குமுறிக் கொண்டிருக்கிறது அத்தனை நெஞ்சும்.
ஒரு நாளைக்கு ஒரு விலை என தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் வெங்காயத்தின் விலையைப் பார்த்து இல்லத்தரசிகள் கலங்கிப் போய் நிற்கின்றனர். பல வீடுகளில் ஏற்கனவே சாம்பார் வெங்காயம் வாங்குவதையே மக்கள் விட்டு விட்டார்கள். இப்போது பெரிய வெங்காயத்தின் விலையும் சூரியனைப் போல சுட்டுக் கொல்கிறது.
இந்த நிலையில் வெங்காய விலையை வைத்து ஏகப்பட்ட மீம்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. நம்ம சிஎன்என் ஐபிஎன் டிவியிலோ வெங்காயத்தை வைத்து "உள்ளம் கொள்ளை போகுதடா" பாணியில் ஒரு செம காமெடியை அரங்கேற்றியுள்ளனர்.

சைரஸ் பரூச்சாவின் அதி பயங்கர கற்பனை
வழக்கம் போல இதுவும் சைரஸ் பரூச்சாவின் வேலைதான். இவரது காமெடியைப் பார்த்து சிரிக்காத வாய்களே இருக்க முடியாது. நாட்டு நடப்புகளை செமையாக தாளித்து எடுப்பார் சைரஸ்.

நெத்திச் சுட்டி
அடுத்து வெங்காயத்தால் ஆன அழகிய நெத்திச் சுட்டி. அது நெற்றியில் ஏற ஏற மனைவிக்கு சந்தோஷம்.. கணவருக்கும்தான்.. கஷ்டப்பட்டு சேர்த்த காசில் வாங்கியதாச்சே.. இருக்காதா பின்னே!
மொத்தத்தையும் மாட்டிய பின்னர் மனைவி கொடுக்கும் அந்த அழகிய போஸ் இருக்கே... அடடா அடடா .. அடடடா!

இப்ப வெங்காயத்தை வைத்து
இப்போது வெங்காயம்தான், பாகிஸ்தான் பிரச்சினையை விட பயங்கரமானதாக இருப்பதால் வெங்காய விலை உயர்வை வைத்து செமையாக நக்கலடித்துள்ளார் சைரஸ்.

ராம்குமார்தான் சைரஸாம்
உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலைப் பார்த்திருப்பீர்கள் பலரும். அதில் வரும் ராம்குமார் கேரக்டரை காப்பியடித்து கலக்கியுள்ளார் இந்த காமெடி காட்சியில் சைரஸ்.

அன்பே. என் அன்பே
அதில் கணவர் ஆசை ஆசையாக தனது மனைவியிடம் வருகிறார். மனைவியின் அழகை ரசிக்கிறார். மனைவிக்கோ வெட்கம்.. பிடுங்கித் தின்கிறது... பின்னர் சிறிய நகைப் பெட்டியை எடுத்து மனைவியிடம் காட்டுகிறார். மனைவியிடம் திறந்து காட்டுகிறார்.

அட வெங்காயம்!
அதைப் பார்க்கும் மனைவிக்கோ பெருமிதம் தாங்கவில்லை. வெட்கத்தோடு முகத்தை திருப்புகிறார்... அந்த குட்டி நகைப் பெட்டியில் இருப்பது அழகிய "வெங்காயத் தோடு".. வைரத் தோடைப் பார்த்தது போல பூரித்து சந்தோஷித்து நிற்கிறார் மனைவி. அதை எடுத்து தனது மனைவி காதில் மாட்டி அழகு பார்த்து ரசிக்கிறார் கணவர்.

பெரிய வெங்காயச் சங்கிலி
அடுத்து "24" பெரிய வெங்காயத்தால் ஆன அழகிய சங்கிலியை எடுத்து மனைவி கழுத்தில் மாட்டி பூரித்துப் போகிறார் கணவர். மனைவிக்கோ இவ்ளோ "காஸ்ட்லி"யான பரிசு எனக்கே எனக்கா என்று உச்சகட்ட மகிழ்ச்சி!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications