கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு.. அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சாராய மரணங்கள் மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் சிபிஐ விசாரணையும் கோரி வருகின்றன.
தமிழக பாஜக சார்பிலும், அதிமுக சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சிபிஐ விசாரணை கோரி மனுவும் அளித்துள்ளன. இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடந்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை குறித்து தன்னிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளிக்கின்றனர். போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது?.. தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த ஆர். என். ரவி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியான தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணம் அடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்" என்று கூறியிருந்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications