Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதலை கண்டித்த மாமனார்- மாமியார்.. முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து 3 பேரை கொன்ற மருமகள்!

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு சிறுவனை சாம்பாரில் விஷம் கலந்து கொன்ற வழக்கில் ஓராண்டுக்கு பின்னர் மருமகளும் அவருடைய கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேவுள்ள இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வேல்முருகன். இவருக்கு 39 வயதாகிறது. விருத்தாசலம் தங்கமணி கார்டனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி காவல்ஆய்வாளர் பூமாலையின் மகள் கீதா (33).

Daughter in law killed her in laws for opposing her illicit relationship

இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். வேல்முருகன் குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கீதா, விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வசித்து வரும் ஹரிஹரன் (44) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. அவ்வப்போது வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிய கீதா, ஹரிஹரனுடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்க்கும் விஷயத்தை யாரோ ஊர்க்காரர்கள் பார்த்துவிட்டு சுப்பிரமணியத்திடம் கூறினர். அது போல் மாமனார் சுப்பிரமணியன் ,தனது மனைவி ஜெயந்தியிடம் விஷயத்தை கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் கேட்டாரா கீதா! நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பதை போல் அவர் பாட்டுக்கு கள்ளக்காதலை தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த விஷயத்தை வேல்முருகனுக்கு சுப்பிரமணியனும் ஜெயந்தியும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி இலங்கியனூரில் உள்ள தனது மகன்கள், மாமனார்-மாமியார், கணவர் உள்ளிட்டோர் முள்ளங்கி சாம்பார் வைத்திருந்தார்.

Daughter in law killed her in laws for opposing her illicit relationship

அதில் கூடவே எலி பேஸ்ட்டையும் கலந்து மாமனார், மாமியாருக்கு கொடுத்துள்ளார். இது தெரியாமல் அந்த வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபுவின் 10 வயது மகன் நித்தீஸ்வரருக்கு கொடுத்துள்ளனர். இதனால் மூவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துவிட்டனர்.

இது தொடர்பாக சந்தேகமடைந்த வேல்முருகன் போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கீதாவையும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனையும் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+