ரயில் கொள்ளை குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரயில் கொள்ளை குறித்து தமிழக சட்டசபையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த உடன் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ரயில் கொள்கை குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!, கடந்த 9ம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கக் கூடிய செய்தி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
இதுகுறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ? அரசு இதுகுறித்து இந்த அவைக்கு என்ன விளக்கத்தை சொல்ல இருக்கிறது என்பதைக் குறித்து விவாதிக்க வேண்டும் என நான் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறேன். ஏனெனில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கிட்டதட்ட 6 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நடந்திருக்கிறது. எனவே இதை அவசரம் கருதி உடனே எடுக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications