• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஷ்டத்திற்கு செயல்படும் கட்சிகள்... "திராட்டில்" விடப்பட்ட காவிரி.. தவிக்கும் விவசாயிகள்!

|

சென்னை: விவசாயிகளுக்கு இது சோதனையான காலம் போலும். ஏற்கெனவே அடி மேல் அடி வாங்கி இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று தமிழக அரசியல்வாதிகளின் பதவிவெறி கண்டு கூனிக்குறுகி நிற்கிறார்கள்

காரணம்... தமிழகத்தின் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் (எம்.எல்.ஏக்கள், எம்.பி. கவுன்சிலர்கள்) காவிரிப் பிரச்சினைக்காக பதவி விலகாமல் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருப்பது மக்களை அதிர வைத்துள்ளது. மக்களின் நலனுக்காக வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்த துணிச்சல் இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது என சாமான்ய விவசாயி கேள்வி கணை தொடுக்கிறான்.

சிறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள்... என இவர்கள் முன்னெடுத்து செல்லும் பிரச்சினையை இந்தியாவின் பெரிய கட்சிகளில் ஒன்று என சொல்லிக்கொள்ளும் அதிமுக செய்ய தவறியது ஏனோ?

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையை அதிமுக அரசு சரியாக அணுகவும் இல்லை - கையாளவும் இல்லை என்பதே முழு முதற் குற்றச்சாட்டாக உள்ளது. மத்திய அரசின் சுடுசொல்லுக்கும், துஷ்பிரயோக செயலுக்கும் பயந்து நடுங்கி, இன்று பாஜகவின் நிழலாக மாறி மக்கள் வெறுக்கும் அரசாக உருமாறி நிற்பதை மக்கள் கண்கூடாக கண்டு வருகிறார்கள்.

பொறுப்பில்லாத அதிமுக

பொறுப்பில்லாத அதிமுக

சிறிதும் பொறுப்பில்லாமல் நாடாளுமன்றத்தை முடக்கியது காவிரி பிரச்சினைக்காக அல்ல என்பதும் அது பாஜகவுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்பதும் தமிழகத்தின் சாமான்ய மக்கள் உணராமல் இல்லை... அதேபோல மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளுவோம் என வசனம் பேசுவது நடிப்பு தவிர வேறொன்றுமில்லை என்பதை பாமர விவசாயி அறியாமல் இல்லை...

காவிரியை வச்சுக்கோ என்றவர்கள்தானே

காவிரியை வச்சுக்கோ என்றவர்கள்தானே

சொத்துக்குவிப்பு பிரச்சினை வழக்கில் கைதாகி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கர்நாடக சிறையில் இருந்தபோது, இதே ஆளும்கட்சி தரப்பு, அம்மாவை எங்களுக்கு கொடுத்து விடுங்கள்... காவிரியை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறியவர்கள்தானே என்பதை மக்கள் மறக்கவில்லை. தவறு செய்த ஒருவர் விடுதலைக்கு காவிரியையே தூக்கிக் கொடுக்க தயாராகிவிட்ட இவர்களா தற்கொலை செய்து செய்வார்கள்? நாடாளுமன்றத்திலேயே 3-வது பெரிய கட்சி என சொல்லப்படும் அதிமுக கூண்டோடு ராஜினாமா செய்ய துணிந்திருந்தால் மத்திய அரசு என்றோ ஆட்டம் கண்டிருக்குமே?

நாயுடு துணிச்சல் இல்லாமல் போயிருச்சே

நாயுடு துணிச்சல் இல்லாமல் போயிருச்சே

தன்னுடைய மாநில நலனுக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மத்திய மந்திரிகளை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் பாஜகவுக்கு கிலி ஏற்படுத்தினாரே... இந்த யுக்தியை தமிழக அரசு கையாண்டிருந்தால் அதிமுக அரசை அனைத்து தரப்பு மக்களும் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்களே?

மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் போல அரசியல் சாசன ரீதியான நெருக்கடிகள் கொடுத்திருந்தால், இந்த விவகாரம் என்றோ முடிந்திருக்குமே? இந்திய அரங்கிலும் தமிழகத்தின் முகம் வேறுமாதிரி மிளிர்ந்திருக்குமே... ஆனால் பதவி ஆசைக்காகவும், மத்திய அரசுக்கு பயந்தும் ஒப்புக்கு தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு மக்களோடு சேர்ந்து இன்று வஞ்சிக்கிறது என ஆளும் அரசு கோரஸ் பாடுவது என்ன நியாயம்?

மார்தட்டும் திமுக

மார்தட்டும் திமுக

திமுகவை பொறுத்தவரை, 18 வருடமாக மத்தியில் அங்கம் வகித்தபோதே காவிரி விவகாரத்தை சரியாக கையாண்டிருக்கலாம். எனினும் தற்போதைய சூழ்நிலைப்படி, மேலாண்மை வாரிய விவகாரத்தில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கெடுப்பு... பிரதமரை சந்திக்க ஒப்புதல் தீர்மானம்... ஆளுநர் சந்திப்பு.... ஈரோடு மாநாட்டில் மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்.... என அனைத்தும் செய்து முடித்துவிட்டு நிறைவான பணி செய்துள்ளதாக மார்தட்டி கொள்கிறது. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் அதை செய்யாதது கட்சியின் பலவீனமா? கட்சி எம்.எல்.ஏக்கள் மீதான நம்பிக்கையா? என தெரியவில்லை.

ஆமாம் சாமி பாஜக

ஆமாம் சாமி பாஜக

தமிழக பாஜகவோ, எல்லாத்துக்கும் ஆமா சாமி...தான்... தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் தமிழக பாஜக உறுதியோடு இருக்கும் என்றும், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக களமிறங்கும் கூறிய மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் இதுவரை என்ன நடவடிக்கையை கையிலெடுத்துள்ளார் என தெரியவில்லை.

எந்தக் கட்சியும் சரியில்லை

எந்தக் கட்சியும் சரியில்லை

மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளது எனக்கூறிகொண்டு, தமிழக மக்களை சமாதானப்படுத்தி கொண்டிருக்கும் முயற்சியில் நடந்துகொள்ள காரணம் மத்திய பாஜகவின் நெருக்கடிக்கா? பயத்திற்கா? பதவி சுயநலத்திற்கா? என தெரியவில்லை. இவ்விவகாரத்தில் மொத்தத்தில் ஒட்டுமொத்த கட்சிகளும் தங்கள் விருப்பத்திற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, யாரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதுபோல் தெரியவில்லை.

அக்கறையே இல்லாத மத்திய அரசு

அக்கறையே இல்லாத மத்திய அரசு

இறுதியாக மத்திய அரசு.... தமிழகத்தின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத மத்திய அரசோ தமிழக மக்களின் எந்த ஒரு உணர்வுக்குமே மதிப்பளிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. தன்னை மறந்தும்கூட, தமிழகத்துக்கு நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதிலும், ஏதாவது ஒரு வகையில் துரோகம் இழைக்க வேண்டும் என்ற கங்கணத்துடனும் வரிந்து கட்டிக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. அப்படியே வாரியம் அமைத்தாலும் அது ஒப்புக்காக இருக்குமே தவிர தமிழக விவசாயியின் நலன் அதில் பிரதிபலிக்காது. பொத்தாம் பொதுவான, குழப்பமான, மதிப்பீடுகள் குறைவான பிரதான அம்சங்கள் இல்லாத வாரியமாகவே அது இருக்கும்.

கட்சிகளின் தோல்வி

கட்சிகளின் தோல்வி

இதற்கு காரணம், அரசியல், வாக்கு வங்கி ஆதாயத்துக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதை மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் உணர்த்த தவறியதே ஆகும். அதேபோல, ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாட்டை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்ய தவறியதே. ஒருவழியாக கெடு முடிவுற்ற நிலையில், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகளின் கையாலாகாதனம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பரிதாப நிலையில் மக்கள்

பரிதாப நிலையில் மக்கள்

மத்திய அரசோ, காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு பட்டை நாமம் போட தயாராகிவிட்டது.... கடைசியில் தனித்து விடப்பட்டது பரிதாபத்துக்குரிய தமிழக மக்களே... அனைத்து தமிழக மக்களும் ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் ஒன்றுகூடி தன்னெழுச்சியாக போராடிதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க போராடினால் மட்டுமே இந்த விவகாரம் முடிவுக்கு வரும் போலிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
The Central Government has cheated Tamil Nadu in setting up Cauvery Management Board. The Tamil Nadu Government has failed to give proper pressure to the Central Government to set up the Board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more