ஆர்.கே. நகரில் விறு விறு பிரச்சாரத்தில் தீபா.. கரை சேருமா படகு!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே திமுக, அதிமுக அம்மா, புரட்சி தலைவி அம்மா, சிபிஎம் ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் காலையில் இருந்து அனல் பறக்க நடந்து வரும் வேளையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்களான திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், சிபிஎம் சார்பில் போட்டியிடும் லோகநாதன் ஆகியோர் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபா பிரச்சாரம்
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தீபா அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

படகில் வருகிறாம்
தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் ஒருசில இடங்களில் படகில் சென்று ஓட்டு கேட்க தீபா தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படகோட்டி ஸ்டைலில்..
ஆர்.கே.நகரில் உள்ள மீனவர்கள் பலர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் என்பதால் படகோட்டி ஸ்டைலில் படகில் சென்று வாக்கு கேட்டால் வாக்குகளை அள்ளி விடலாம் என்று கணக்குப் போட்டுள்ள தீபா, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறாராம்.

படகு வேன் தயார்
தீபாவின் பிரச்சாரத்திற்காக சிறப்பு வேன் ஒன்று தயாராகி வருகிறதாம். அந்த வேனும் படகு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். விரைவில் படகு வேனில் வந்து தீபா பிரச்சாரம் செய்து ஆர்.கே. நகர் வாக்குகளை அள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications