தீபா அரசியலுக்கு வருவது உறுதி.. இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?
புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று அறிவிக்க இருக்கிறார்.
சென்னை: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று அறிவிக்க இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று 17.1.2017 காலை 6.30 மணிக்கு தி நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு தீபா சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

காலை 7.மணிக்கு் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தி எதிர் கால திட்டம் குறித்து சபதம் எடுக்கிறார்.
காலை 11 மணிக்கு தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் எதிர் கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
மாலை 4 மணிக்கு திநகர் இல்லத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்.
அதன் பின்னர் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிகிறார். இதையடுத்து புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தீபா புதிய அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications