ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் கடந்த 25 ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இளங்கோவன் பேசும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து இளங்கோவன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கோபத்தை உருவாக்கியது. இதன் பின்னர் பல்வேறு இடங்களில் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் இளங்கோவன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து அமைச்சர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இளங்கோவன் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications