நெல்லையில் மிரட்டும் டெங்கு காய்ச்சல் – ஒருவர் பலி 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நெல்லை: டெங்கு காய்ச்சலால் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடும் சுகாதார சீர்கேடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் பலர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அங்கு தொடங்கிய காய்ச்சல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று திரும்பினர்.
அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் அரசு மருத்துவமனையிலும், முக்கிய இடங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டதால் டெங்கு காய்ச்சல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் தற்போது கோடை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையாததால் டெங்கு இருக்குமோ என்ற அச்சத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் இதுவரை சுகாதார துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் பீதி காரணமாக கலிங்கப்பட்டிக்கு யாரும் வராததால் அந்த கிராம மக்கள் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்க வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
சுகாதார துறையினர் உடனே துரித நடவடிக்கை எடுத்து மேலும் டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications