சிவகங்கையில் டெங்குவால் ஒரே நாளில் 3 பேர் பலி... அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் புகார்
சிவகங்கை மாவட்டத்தில் டெங்குவால் ஒரே நாளில் 3 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் டெங்குவால் ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் தமிழகத்திலும் பரவியது. இதற்கு காரணம் சுகாதார சீர்கேடு என்று கூறப்பட்டு வந்தது. தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி வரும் நிலையிலும் டெங்கு உயிரிழப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

மருத்துவர்கள் தயார் நிலை
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. அதேபோல் சுகாதார நடவடிக்கைகளான குப்பைகளை சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு
இத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்றும், மரு்ததுவமனையே சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். படுக்கை பற்றாக்குறை காரணத்தாலும், அதிக அளவில் மருத்துவமனைக்கு வரும் காரணத்தினாலும் ஒரு படுக்கையில் இருகுழந்தைகள் அனுமதிக்கப்படும் அவலமும் நடைபெறுகிறது.

எடப்பாடியில் ஏராளமானோர் சாவு
எடப்பாடி முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் யாரும் வருவதில்லை என்றும், செவிலியர்களே மருத்துவம் பார்ப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

சிவகங்கையில்...
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் டெங்குவால் ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஆண்டுரணி என்ற இடத்தில் கிலாடின் சோபியா என்ற பெண்ணும், வடக்கு சாலை கிராமத்தில் ஹாஜிரா பீவி, பாலமுருகன் ஆகியோரும் பலியாகினர்.












Click it and Unblock the Notifications