For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ்ட் வழக்கு

இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ்ட் வழக்கு தொடர்ந்துள்ளது.

மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி வங்கதேசம் மற்றும் இந்தியாவில் 1.50 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக உள்ளனர்.

Deport Rohingya Muslims, Chennai trust tells SC

இந்த 40,000 அகதிகளையும் நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது வரும் 11-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்ட்டிவ் டிரஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில், ரோஹிங்யா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்களை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary
A trust from Chennai has moved the Supreme Court seeking deportation of Rohingya Muslims living illegally and said that their presence posed, social, economic and security threat to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X