வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழக 9 சதவீதம் குறைவாக பெய்தது.

Rain

இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்ந காற்றழுத்தம் இன்று வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை வலுக்குறைந்துள்ளதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Meteorological center says that depression in the South West of Bay of Bengal has been weakened. Chennai Meteorological center said that the next 2 days will be available at Ramanathapuram, Thoothukudi and Nellai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற