தமிழகம் முழுவதும் ஏ.டி.எம்களில் காவலாளிகளை நியமிக்க டி.ஜி.பி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டுமென்று தமிழக டிஜிபி கூறியுள்ளார்.
பெங்களூரில் செவ்வாய்கிழமை காலை எல்.ஐ.சி. பில்டிங் அருகில் உள்ள ஏடிஎம்.மில் பணம் எடுக்கும் போது ஜோதி என்ற பெண்ணை மர்ம நபர் கத்தியால் வெட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி, ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்து நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்க டிஜிபி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஏடிஎம்களில் காவலாளிகளை கண்டிப்பாக நியமிக்க வேண்டுமென்றும் டிஜிபி ராமானுஜம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications