ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் பரிசு என அறிவித்த பாஜகவின் சரவணன் மீது தாராபுரம் போலீசில் புகார்
தாராபுரம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் ரூ1 லட்சும் பரிசு என்று அறிவித்த முன்னாள் எம்.எல்.ஏ.வான பாஜகவின் மதுரை டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னையில் அண்மையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடியையும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

இளங்கோவன் மீது விமர்சனம்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த பேச்சு பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி டாக்டர் சரவணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது; அரசியலில் காணாமல் போனவர் என விமர்சித்தார்.

இளங்கோவனுக்கு மிரட்டல்
அத்துடன் நிற்காமல், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் கால்வைக்க கூட முடியாது. அவர் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு ரூ1 லட்சம் பரிசு வழங்குவேன் என்றும் அறிவித்தார். டாக்டர் சரவணின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் போலீசில் புகார்
மேலும் தாராபுரம் போலீசில் மதுரை டாக்டர் சரவணன் மீது தாராபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரை அவமானப்படுத்தும் வகையில் டாக்டர் சரவணன் பேசியுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தொடரும் வன்முறை போக்கு
தமிழகத்தில் பிரபலங்களைத் தாக்கினால் பரிசு என்கிற வன்முறைப் போக்கு தொடருகிறது. பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயசேதுபதியை தாக்கினால் பரிசு என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்திருந்தார். ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு என பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வரிசையில் தற்போது பாஜகவின் மதுரை டாக்டர் சரவணன் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications