தருமபுரி காமாட்சி "அது"கூட டூவீலரில் போனாரா? நல்லம்பள்ளி சாலையில் நள்ளிரவில் என்ன நடந்தது? இப்படியா?
தர்மபுரி: தருமபுரியில் நடந்த கொலை சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை.. இந்த கொலையைவிட, அந்த கொலை செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தான், தர்மபுரி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. என்ன நடந்தது நல்லம்பள்ளியில்?
நல்லம்பள்ளி அடுத்துள்ள பகுதி தாசன்கொட்டாய்.. இங்கு வசித்து வருபவர் மணி.. இவர் ஒரு நாடகக்கலைஞர் ஆவார்.. கடந்த 22ம் தேதி இரவு, ஊர் பாலம் அருகே இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. தலை, முகத்தில் நிறைய காயங்கள் கிடந்தன.. இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் மணியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

தலையில் நிறைய காயங்கள்
பெரும்பாலும் தலையிலேயே நிறைய காயங்கள் இருந்ததால், விபத்தில் சிக்கி மணி இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.. ஆனால், அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேறு மாதிரியாக வந்தது. விபத்தில் மணி இறந்திருக்க முடியாது என்றும், உடலில் பல்வேறு பகுதிகளில் கொடூர தாக்குதலுக்கான காயங்கள் உள்ளதாகவும் ரிப்போர்ட் வந்திருந்தது.
இதற்கு பிறகுதான், மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கருதி, அந்த குற்றவாளியை பிடிக்க தீவிரமாயினர்.. ஆனால், இதற்கான எந்த க்ளூவும் இல்லாததால், மணியின் செல்போன் நம்பரை வைத்து டிராக் செய்ய துவங்கினார்கள்.. அப்போதுதான், காமாட்சி என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது.. இவருடன்தான், மணி அதிக நேரம் போனில் பேசி வந்திருப்பதும் தெரியவந்தது. எனவே காமாட்டியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
தகாத உறவு - அடிக்கடி தகராறு
விசாரணையின்போதே, காமாட்சியின் நடவடிக்கையில் பலத்த சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.. இறுதியில், மணியுடன் காமாட்சிக்கு நீண்ட காலமாகவே தகாத உறவு இருந்து வந்ததும், ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது
கடந்த 22ம் தேதி இரவு, காமாட்சி வீட்டுக்கு போன மணி, வழக்கம்போல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது காமாட்சியின் மகன் பழனிசாமி வீட்டில் இருந்துள்ளார்.. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்... வார விடுமுறைக்காக லீவில் வீட்டுக்கு வந்திருந்தார்..
கொதித்தெழுந்த மகன்
காமாட்சியிடம் மணி தகராறில் ஈடுபட்டபோது, பழனிசாமி ரூமில் தூங்கி கொண்டிருந்தார்.. மணியின் சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி, தன்னுடைய அம்மாவிடம் மணி தகராறு செய்வதை பார்த்து கொந்தளித்துவிட்டார். இதனை பழனிசாமி தட்டிக்கேட்டதற்கு மணி ஆவேசமாக பதிலளித்துள்ளார்..
இதனால் ஆத்திரமுற்ற பழனிச்சாமி, வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து வந்து மணியை கொடூரமாக தாக்கினார்.. இதில் அங்கேயே சரிந்து விழுந்து இறந்துவிட்டார் மணி.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காமாட்சி, மகன் போலீசில் சிக்கிவிடக்கூடாதே என்று பயந்தார்.
டூவீலரில் சடலம்
இதற்காக, தன்னுடைய டூவீலரில், மணியின் சடலத்தை வைத்து கட்டினார் காமாட்சி.. பிறகு மகனை துணைக்கு அழைத்து கொண்டு, டூவீலரிலேயே சடலத்தை வைத்து ஓட்டி சென்றுள்ளனர்.. பிறகு, விபத்தில் இறந்தது போல தெரியவேண்டும் என்பதற்காக, சாலையின் பக்கவாட்டிலிருந்து சடலத்தை கீழே தள்ளிவிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தாய், மகனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications