வெட்டி வீழ்த்தப்படும் 100 ஆண்டு மரங்கள்.. பெரும் கவலையில் நாகர்கோவில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோயில்: நாகர்கோயில் நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையை மறைக்கும் வகையில் இருந்த நூறு ஆண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நாகர்கோவிலில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அலுவலக சந்திப்பில் உள்ளது இந்த ஜவுளிக் கடை. நகரின் முக்கிய அடையாளங்களில் இந்தக் கடையும் ஒன்று. 9 மாடி கொண்ட தளங்களுடன் இந்த கடை நாகர்கோயில் நகரின் பிரம்மாண்ட "மால்" போல திகழ்கிறது.

இந்த நிலையில் அக்கடையின் முன்புறத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான பல மரங்களை வெட்டி எடுத்துள்ளனர். அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மறைக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வெட்டி விட்டதாக மக்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். அந்த கடையை ஒட்டியே கலெக்டர் ஆபிஸ் ஸ்டாப் பேருந்து நிறுத்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ பேருக்கு நிழலாக இருக்க வேண்டிய மரத்தை ஒரு கட்டடத்தின் அழகு கண்களுக்கு தெரியவில்லை என்ற காரணத்துக்காக அதை வெட்டி அங்கு நிற்கும் பல கண்களை வெயிலில் சுருங்க வைத்திருகிறார்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் இதுபோல இயற்கையை சீரழிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பகவதி புரம் பகுதியில் இதுபோல மரங்களை வெட்டித் தள்ளி இயற்கையை சீரழித்ததையும் சிலர் புகைப்படத்துடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

- Inkpena சஹாயா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nagercoil people are shocked over the cutting of 100 year old trees in Nagercoil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற