தென்காசியில் பைனான்ஸ் கட்டாத கணவன்.. மாயமான பைக்.. இறுதியில் மனைவிக்கு நிதி நிறுவனம் தந்த ட்விஸ்ட்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கணவர் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு பைனான்ஸ் கட்டவில்லை என்று மனைவி வாங்கிய இருசக்கர வாகனத்தை பைனான்ஸ் நிறுவனம் பறிமுதல் செய்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க கோரி சங்கரன் கோவிலைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனியார் நிதி நிறுவனம் மிது காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பைனான்ஸில் வண்டி வாங்குவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தனியார் நிதி நிறுவனங்களில் பைனான்ஸ் போட்டு தான் பலர் இருசக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வாகனம் தொலைந்து போனால், அதற்கு இன்சூரன்ஸ் இருக்கும். அதை வைத்து கிளைம் செய்து கொள்ள முடியும். பைனான்ஸ் செய்து தருபவர்களே இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள்.அதன்படியே இன்சூரன்ஸ் எடுத்தால் தான் பலர் வண்டி வாங்கியிருப்பார்கள்.

ஒருவேளை உங்கள் வாகனம் தொலைந்து போனால், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்து, புகாரின் நகலை பெற்று தனியார் நிதி நிறுவனங்களுக்கும், காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் வாகனத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை வந்தால், அதனை கிளைம் செய்து தனியார் நிதி நிறுவனத்திற்கு தவணை தொகையை தந்துவிடுவார்கள்.. நீங்கள் தொலைந்த வண்டிக்கு தவணை கட்ட தேவையில்லை..
காப்பீடை பொறுத்தவரை தாங்கள் காப்பீடு செய்திருக்கும் நிறுவனத்தில் மனு செய்தால் அதை வாகனத்தை காப்பீடு செய்த வருடத்தை பொறுத்து அதன் மதிப்பீடு என்னவோ அதற்குண்டான நஷ்ட ஈடு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்கள் வாகனத்தின் காப்பீடு காலாவதியாக இருக்கக் கூடாது. தற்சமயம் புதுப்பித்ததாக இருக்க வேண்டும்.. அப்படி என்றால் மட்டுமே தாங்கள் விண்ணப்பிக்க முடியும் அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் புகாரைக் கொண்டு தங்கள் காப்பீடு காலாவதியாக இருந்தாலும் அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் போகும். சரி விஷயத்திற்கு வருவோம்.
தென்காசி மாவட்டம் மாவட்டம் சங்கரன்கோவிலில் கணவர் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு பைனான்ஸ் கட்டவில்லை என்று மனைவி வாங்கிய இருசக்கர வாகனத்தை பைனான்ஸ் நிறுவனம் பறிமுதல் செய்திருக்கிறது. சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரியம்மாள்-முத்துக்குமார் ஆகிய இருவரும் கணவன், மனைவி ஆவார்கள். மாரிம்மாளின் கணவர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்திற்கு தனியார் நிதி நிறுவனம் மூலம் பைனான்ஸ் பெற்று கடனை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் மூலம் வாங்கிய இருசக்கர வாகனம் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தற்போது பைனாஸ் பணம் கட்டமால் இருந்ததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் திருடு போன கணவர் இருசக்கர வாகனத்தை விட்டு தன்னுடைய வாகனத்தை எடுத்து சென்றதாகவும் எனவே என்னுடைய வாகனத்தை மீட்டு தர வேண்டும் என சங்கரன்கோவில் நகர் காவல்நிலையத்தில் மாரியம்மாள் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்...
கணவர் முத்துக்குமார் பைனான்ஸ் பெற்ற வாகனம் திருடு போன நிலையில் அதற்கு பதிலாக எந்த வித சம்பந்தமும் இல்லாத மனைவி மாரியம்மாள் வாகனத்தை பைனான்ஸ் நிறுவனம் எடுத்த சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications