ஜோலார்பேட்டைக்கு நற்செய்தி.. அதுவிடுங்க.. காட்பாடியில் "காவி" சத்தம்.. உடனே திமுக.. போலீஸாரின் மாஸ்
திருப்பத்தூர்: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முதல் அம்ரித் பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, காட்பாடி வந்து நின்றது.. அப்போது ஜோலார்பேட்டையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
அயோத்தியில் 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி, காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்... அதில் ஒரு அமரித் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்க மாநிலம் மாவட்டத்தில் புறப்பட்டது. இது 5 மாநிலங்கள் இணைக்கும் வகையில், அதாவது, மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என்று 5 மாநிலங்களை இணைக்கிறது.

இந்த ரயில் கடந்த 30ம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது . இந்த ரயில் மால்டா இருந்து பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2247 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்த அம்ரித் பாரத் ரயில், வந்தே பாரத் ரயில்போல அதிவேகமாக செல்லக்கூடியது. இந்நிலையில் முதல்முறை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு வந்தது..
2 நிலையங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை என இரண்டு ரயில் நிலையங்களில் 5 நிமிடம் மட்டும் நின்று செல்லும் நிலையில், நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு இந்த ரயில் வந்தது..
இந்த ரயிலை தென்னக ரெயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ரயில்வே ஊழியர்கள் பலர் பூக்களை தூவி, முதல் ரயிலை வரவேற்றனர்.. அப்போது, திடீரென பாஜக - திமுக தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது.
நடைமுறை: முன்னதாக இந்த ரயிலை வரவேற்பதற்காக பிரத்யேகமாக மேடை, நடைமேடை அருகில் போடப்பட்டிருந்தது. ரயிலை வரவேற்க பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு திரண்டிருந்தனர்.. திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மேடையில் திரண்டிருந்தனர்.
அப்போது, பாஜக மாவட்ட நிர்வாகிகளும் அந்த மேடையில் ஏறி ரயிலை வரவேற்க முயன்றபோது, திமுகவினர் பாஜகவினரை தடுத்ததாக சொல்கிறார்கள். இதனால், திமுக - பாஜக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதமாக உருவெடுத்துவிட்டது. ரயில் வரும்நேரத்தில், இவர்களின் மோதலை பார்த்த ரயில்வே போலீசாரும், ரயில் நிலைய அதிகாரிகளும், விரைந்து சென்று 2 தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தனர்..
சலசலப்பு: அதற்குள் ரயில் வந்துவிட்டது. பிறகு, உற்சாக வரவேற்பு தந்து, பச்சை கொடியும் காட்டி ரயிலை வழியனுப்பி வைத்தனர்.. ரயில் கிளம்பி செல்லும்போது, பாஜகவினர் "பிரதமர் மோடி வாழ்க" என்று முழக்கமிட்டதால், மறுபடியும் நடைமேடையில் சலசலப்பு ஏற்பட்டது... மறுபடியும் 2 தரப்பினரும் வாக்குவாதத்தில் இறங்கினார்கள். இதனால், இவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரயில்வேவே துறை அதிகாரிகள் விழித்தனர்..
கடைசியில், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.. இதற்கு பிறகே இரு கட்சியினரும் அமைதியாகினார்கள். ரயில் சென்றதும், 2 தரப்பினருமே அமைதியாக கலைந்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications