"எட்றா கைய".. நைட் நேரத்தில் பஸ்ஸூக்குள் "சில்மிஷம்".. பெண் போலீஸையே சீண்டியது யார் தெரியுமா.. அடச்சீ
ஊட்டி: நபர் ஒருவர் குடிபோதையில் தாக்கியதால், பெண் போலீஸ் காயமடைந்துள்ளார்.. இப்போது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது குன்னூரில்?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கொம்பை.. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்.. 30 வயதாகிறது.
இவர் 2 நாள் முன்பு, பணி நிமித்தமாக கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார்.. அங்கு வேலையை முடித்துவிட்டு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து குன்னூருக்கு பஸ் ஏறியிருக்கிறார்..

குன்னூர் பஸ்: அதற்குள் இரவு நேரமாகிவிட்டது.. பஸ்ஸில் இவர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு, பின்பக்க சீட்டில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.. பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி வந்து கொண்டு இருந்தது... அப்போது அந்த நபர், பெண் போலீசை பின்புறமிருந்து சில்மிஷம் செய்ய தொடங்கினார்... இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், எழுந்து நின்று அந்த நபரை பார்த்து சத்தம் போட்டார்.. ஆவேசமாக திட்டிவிட்டு, மறுபடியும் உட்கார்ந்து கொண்டார்.. ஆனால், அந்த நபரோ, அடங்கவேயில்லை.. மறுபடியும், பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தர ஆரம்பித்தார்..
இதனால் மறுபடியும் பெண் போலீஸ் சத்தம் போட்டதையடுத்து, பஸ்ஸுக்குள்ளேயே தகராறு வெடித்தது.. பெண் போலீஸ் திட்டியதால் ஆத்திரமடைந்த அந்த நபர், பெண் போலீசை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது... இதை பார்த்து பஸ்சில் இருந்த சக பயணிகள் அதிர்ந்து போனார்கள்.. அவர்கள் அனைவருமே திரண்டு வந்து பெண் போலீசுக்கு ஆதரவாக பேசி, அந்த நபரை தட்டிக்கேட்டார்கள்.. அதற்கும் அந்த நபர் அசரவில்லை.. நான் யார் தெரியுமா? பெரிய பெரிய ஆபீசர்களை எல்லாம் எனக்கு தெரியும், என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது, எனக்கு எஸ்பி தெரியும், டிஎஸ்பி தெரியும் என்றெல்லாம் வாரிவிட்டுள்ளார்.

நைட் நேரம்: இதனை கேட்டு பேருந்து பயணிகள் ஒருவேளை, இதெல்லாம் நிஜமாக இருக்குமோ என்று லேசாக ஜெர்க் ஆகி பின்வாங்கியுள்ளனர்.. இவ்வளவு தகராறும் ஓடும் பஸ்ஸுக்குள்ளேயே நடந்துள்ளது.. அதற்குள் பஸ், குன்னூர் அருகே உள்ள காட்டேரிக்கு வந்துவிட்டது.. பஸ்ஸில் உள்ள எல்லாருமே தனக்கு எதிராக திரும்பி விட்டதால், அந்த நபர் காட்டேரியில் இறங்கிவிட்டார்.. பின்னாடியே வந்த வேறு ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.. இதை பார்த்ததும் ஆவேசமடைந்த பெண் போலீஸூம், பஸ்ஸைவிட்டு கீழே இறங்கி, அந்த நபர் சென்ற அதே பஸ்சில் ஏறி கொண்டார்..
தன்னுடைய பஸ்ஸிலேயே, பெண் போலீஸ் ஏறுவதை பார்த்ததும், அந்த நபர் பதறிப்போனார்.. பஸ்ஸில் ஏறிய பெண் போலீஸ், நேராக டிரைவரிடம் சென்று, லெவல் கிராசிங்கில் பஸ்ஸை நிறுத்துமாறு சொன்னார்.. இதற்குள் மற்ற போலீசாருக்கும் போனிலேயே தகவல் கொடுத்தார்... பஸ் லெவல் கிராசிங்கில் நின்றது.. அங்கே மற்ற போலீசாரும் தயாராக நின்றுகொண்டிருந்தனர்.. அனைவரும் சேர்ந்து, அந்த நபரை பஸ்ஸூக்குள்ளிருந்து குண்டுக்கட்டாக இறக்கி, குன்னூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்..
தருமன் கைது: குன்னூர் அருகே ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் போலீஸ் புகார் தந்தார்.. இதையடுத்து, அந்த நபரிடம் விசாரணை ஆரம்பமானது.. அவர் பெயர் தருமன்.. 56 வயதாகிறது.. கோத்தகிரி அருகே உள்ள அஜ்ஜூர் பகுதியில் வசித்து வருகிறாராம்.. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்னதுமே, மொத்த போலீசாரும் அதிர்ந்து போய்விட்டனர்.. இதையடுத்து, பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தருமனை ஆன் தி ஸ்பாட்டில் கைது செய்தனர். இறுதியில், குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அந்த ஆபீஸர் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications