Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவு வார்த்தைய விட்டுட்டாரே.. ஆர்எஸ்எஸ் + கிறிஸ்தவம்.. அங்கே வரை போன மேட்டர்..இந்து முன்னணி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதியை, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தால், கங்கை நீரால் நாடாளுமன்றத்தையே கழுவ வேண்டியிருக்கும்.. ஆர்எஸ்எஸ் மனநிலை இதுதான்" என்று சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

புதிய நாடாளுமன்றத்தை, நம் நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவே திறந்து வைக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி அதை திறக்கக்கூடாது என்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

திறப்பு விழா: மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கே மத்திய அரசு அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதுடன், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையும், 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.. அத்துடன், பாஜக அரசையும் பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

Did the Speaker Appavu insult Hinduism and hindu munnani demands disqualification of speaker appavu

கண்டனம்: அந்தவகையில், சபாநாயகர் அப்பாவுவும் விமர்சித்து பேசியிருந்தார்.. குறிப்பாக, "ஜனநாயகத்தின் உடைய உயரிய மரியாதையை, குடியரசுத் தலைவருக்கு தான் கொடுத்து இருக்கிறார்கள். அவரை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்காமல் இருப்பது நாட்டு மக்கள் வேதனைப்படுத்தியுள்ளது.. ஜனாதிபதியை அழைத்தால், கங்கை நீரால், நாடாளுமன்றத்தை கழுவ வேண்டும் என்ற மன நிலையில்தான் ஆர்எஸ்எஸ் உள்ளது. அதனால்தான் ஜனாதிபதியை அழைக்கவில்லை" என்று காட்டமாக கூறியிருந்தார்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடர்பாக இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. அந்தவகையில், இந்து முன்னணி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கங்கை நீர்: அந்த அறிக்கையில், "சபாநாயகர் திரு. அப்பாவு தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ஜனாதிபதி மேதகு. முர்மு வந்தால் கங்கை நீரால் புனிதப்படுத்த வேண்டும் என்பதாலேயே அழைக்கப்படவில்லை என்று அவர் பேசியுள்ளதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. இவ்வாறு சபாநாயகர் பேசியது அவர் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை அவமதிக்கும் செயல்.

Did the Speaker Appavu insult Hinduism and hindu munnani demands disqualification of speaker appavu

நாகரிகம் இல்லாமல், மத காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் சபாநாயகர் பேசியதை தமிழக முதல்வர் ஏற்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சனாதன தர்மத்தை பற்றி கிறித்துவரான அப்பாவு விமர்சனம் செய்துள்ளது அறியாமை மட்டும் அல்ல தீய உள்நோக்கம் கொண்டது. அனைத்து கோவில்களிலும் அனைத்து சமூகத்தை சேர்ந்த 63 நாயன்மார்கள் சன்னதி இருப்பதும், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாயன்மார்களுக்கும் குரு பூஜை நடப்பதும் அனைவரும் அறிந்ததே.

கிறிஸ்தவ மதம்: அதே சமயம் அப்பாவு சார்ந்துள்ள கிறித்துவ மதத்தில் சாதி வன்மமும், நிறவெறியும் இன்றும் தலைவிரித்தாடுகிறது. இதை பற்றி பொதுவெளியில் தைரியம் இருந்தால் பேசட்டும். கல்லறைகளில் கூட சாதிபேதம் பார்ப்பதும், இறந்தவர் குடும்பம் சர்ச்க்கு தசமபாகம் நிதி தரவில்லை என புதைக்க மறுத்த மனிதாபிமானமற்ற முறையில் பாதிரியார்கள் பேசியது இவருக்கு தெரியுமா? கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது என்பார்கள் இது அப்பாவுவிற்கு சாலப் பொருந்தும்.

கிறித்தவத்தை தூக்கிப் பிடித்து தனது கிறித்துவ விசுவாசம் எனும் அடிமை புத்தியை காட்டி அவர் மகிழட்டும். ஆனால் கிறித்துவர்கள் வரவில்லை என்றால் தமிழர்கள் தற்குறியாக இருந்திருப்பார்கள் என்பதும், இந்த பாரத தேசத்தின் உயரிய பதவியில் உள்ள குடியரசுத் தலைவரை சாதியை முன்னெடுத்து, சனாதன இந்து தர்மத்தையும், நமது குடியரசு தலைவரையும் அவமானப்படுத்தி பேசியுள்ளதும் அரசியல் சாசன சட்டப்படி குற்றம்.

Did the Speaker Appavu insult Hinduism and hindu munnani demands disqualification of speaker appavu

பதவி நீக்கம்: சபாநாயகர் அப்பாவு அவர்களின் அநாகரிகமான பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.அவரை பதவி நீக்கம் செய்ய தமிழக முதல்வரையும் தமிழக கவர்னர் அவர்களையும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறது" என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தன்னடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+