'தினகரன்' எரிப்பு வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட் கோரி சிபிஐ இன்று மனு தாக்கல்
மதுரை: தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட்டை பிறப்பிக்க கோரி சிபிஐ இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்ய உள்ளது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதை மறுஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதேபோல் பத்திரிகை அலுவலக எரிப்பில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடியும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் சிபிஐ மெத்தனம்காட்டுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனிடையே நீதிபதிகள் பி.ஆர். சிவக்குமார், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை திட்டமிட்டு இழுத்தடிக்கின்றனர். சிபிஐ தரப்பிலும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்காத நிலையிலும், இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட முடியும். குற்றம்சாட்டப்பவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்வதாகக் கூறியதை ஏற்றுக்கொண்டு, விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications