மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது
மதுரை: தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் மேலும் இருவரை கைது செய்த போலீஸார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் இதில், ஊழியர்கள் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர்மனுதாரர்கள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அதில் ஒருவரான சரவணமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், மதுரை கோ.புதூரைச் சேர்ந்த வி.சுதாகர், கீரைத்துறையைச் சேர்ந்த மாலிக்பாட்ஷா ஆகியோரை சிபிஐ போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இவர்களை நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் முன் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications