எடப்பாடியோ ஓபிஎஸ்ஸோ...ஆட்சியை தீர்மானிக்கும் தினகரனின் 20 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் நாற்காலியில் எடப்பாடியே நீடித்தாலும் அல்லது ஓ. பன்னீர்செல்வம் வந்து அமர்ந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கப் போவது எங்களது ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் 20 எம்.எல்.ஏக்கள்தான் என்கின்ற தினகரன் வட்டாரங்கள்.

அ.தி.மு.கவின் இரு கோஷ்டிகளும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க இருக்கின்றனர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடக்கும் இந்த நடவடிக்கைகளை அதிமுக தொண்டர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

ஆனால் திடீரென்று தினகரனும் ஒதுங்கிவிட்டதைக் குழப்பத்தோடு பார்க்கின்றனர். கட்சி மற்றும் ஆட்சிக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரும் ரசிக்கவில்லை.

திவாகரன் வரவேற்பு

திவாகரன் வரவேற்பு

திவாகரன் உள்ளிட்ட ஒருசிலர்தான் நேரடியாக வரவேற்கின்றனர். சசிகலா கணவர் நடராசனின் உறவுகளோ, 'எல்லாம் நாம் வளர்த்த கிடாக்கள்... இப்ப எல்லாம் நம்மையே முட்டுகின்றன எனக் கோபத்தைக் காட்டியுள்ளனர்.

கொங்கு கோஷ்டி...

கொங்கு கோஷ்டி...

தினகரனை ஓரம்கட்டியதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணிக்குப் பெரும் பங்கு உண்டு. அவரும் தங்கமணியும்தான் அமைச்சர்களை எடப்பாடி பக்கம் கொண்டு வந்தனர். இவர்களின் முயற்சிக்கு நீதித்துறையின் உச்சத்தில் இருந்த மாஜி மாண்புமிகு பெரிதும் உதவியாக இருந்தார். அதனால்தான் தம்பிதுரையால் எளிதில் காரியத்தை சாதிக்க முடிந்தது.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

கொங்கு மண்டலத்தின் கோபத்துக்கு முக்கியக் காரணம், தினகரன் அண்மையில் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் முதல்வரைப் போல அமைச்சர்களை விளாசித் தள்ளினாராம். ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தலை அடுத்து முதல்வர் நாற்காலியை நோக்கி நகரும் முடிவில் இருந்தார் தினகரன். அந்த கோபமும் கொங்கு கோஷ்டிக்கு இருக்கிறது.

ஸ்லீப்பர் செல்கள்

ஸ்லீப்பர் செல்கள்

தற்போது இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகார் வெளியில் வந்ததும் கொங்கு கோஷ்டி அமைச்சர்கள் தனி அணியாக அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் 20 பேர் வரையில் உள்ளனர். இவர்கள் மௌனமாக இருப்பதற்குக் காரணமே, சசிகலா குடும்பத்து உறவுகளின் வார்த்தைகள்தானாம்.

மேலும் 30 பேராம்...

மேலும் 30 பேராம்...

ஆட்சி அதிகாரத்தை மிரட்டுவதற்கு இவர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்த இருக்கிறாராம் தினகரன். இவர்களுடைய ஆதரவு இல்லையென்றால், ஆட்சி கவிழ்ப்பு உறுதியாகிவிடும். கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களின் பலம், பலவீனத்தை கணித்து வைத்திருக்கிறார். இதன் அடிப்படையில் மேலும் 30 பேரை தம்மால் கொண்டுவர முடியும் என்கிறாராம் தினகரன்.

எப்ப வெடிக்குமோ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK sources said that if Dinakaran want to topple the govt, 20 MLA will reovlt against the Govt.
Please Wait while comments are loading...