போதையில் பெண்ணிடம் அத்துமீறிய எஸ்.ஐ... ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர்
திண்டுக்கல்: ஓடும் பேருந்தில் குடிபோதையில் பெண்ணிடம் வம்பிழுத்த சிறப்பு சப்.இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணிபுரிபவர் லட்சுமணன். இவர், வியாழக்கிழமையன்று மதியம் திருச்சியில் இருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

ஒரு சில இருக்கைகளில் மட்டுமே பயணிகள் இருந்தனர். சப்.இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஒரு பெண் தனியே அமர்ந்திருந்த இருக்கையில், சென்று அமர்ந்தார். குடிபோதையில் இருந்த லட்சுமணன் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். ஒரு கட்டத்தில் மற்றவர்களிடம் சொல்ல முடியாமலும், பொறுத்துக் கொள்ள முடியாமலும் தவித்த அந்த பெண் எழுந்து நின்று கொண்டார். அப்போதும் லட்சுமணனின் தொந்தரவு தாங்கவில்லை. இருக்கைக்கு செல்ல முயன்றார். ஆனால், அவருக்கு வழிவிடாமல் கிண்டல் செய்தார்.
உடனே அந்த பெண், பேருந்தின் கண்டக்டரை அழைத்து, "இவரை வேறு சீட்டுக்குப் போகச் சொல்லுங்க, இல்லையா எனக்கு வழிவிடச் சொல்லுங்கள்'' என்று கூறினார். ஆனால் கண்டக்டர் அதனை கண்டுகொள்ளவில்லை. அப்போது சப்.இன்ஸ்பெக்டர், நீ என்ன ஐஸ்வர்யா ராயா? என்று கேட்டார். இதனால் எஸ்.எஸ்.ஐ. யின் தொந்தரவு தாங்க முடியாமல் அந்த பெண் நின்றுகொண்டே பயணித்தார்.
குடிபோதையில் பெண் பயணியிடம் அத்துமீறிய திண்டுக்கல் எஸ்.ஐ.!குடிபோதையில் பெண் பயணியிடம் அத்துமீறிய திண்டுக்கல் எஸ்.ஐ.! (வீடியோ) திருச்சி: திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 1975) நேற்று பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் அடாவடியாக வந்து உட்கார்ந்த போலீஸ் எஸ். ஐ. ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார். நிலைமை எல்லை மீறிச் செல்லவே, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே, அருகில் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனரிடம், அந்த எஸ்.ஐ.-யை வேறு இருக்கையில் அமரச் சொல்லுமாறு கேட்கிறார். ஆனால் அதனை நடத்துனர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் வழியைவிட்டால் தாமே வேறு இருக்கைக்கு சென்றுவிடுவதாக அந்த பெண் கூறியும், 'ஸ்டாப்பிங் வரட்டும்... நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில், அருகில் இருந்த மற்ற பயணிகள் ஆவேசமடைந்து, அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், 'நான் செய்தது தப்புதான்...!' என்று போதையில் தள்ளாடியபடியே கூறுகிறார். போதை போலீஸ். விசாரித்ததில் அந்த போதை போலீஸ் திண்டுக்கல் அருகே உள்ள அம்மய நாயக்க நல்லூர் காவல்நிலையத்தில் SSIஆக பணியாற்றி வரும் ரா.லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது.காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக அரங்கேறிய அந்த காட்சியின் வீடியோ இங்கே...#DrunkenSI #நீஎன்னஐஸ்வர்யாராயா #Vikatan #விகடன்
Posted by Vikatan EMagazine on Thursday, June 11, 2015
இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர், ஆவேசமடைந்து அந்த பெண்ணுக்கு வழிவிடுமாறு எஸ்.எஸ்.ஐ.யை கண்டித்துள்ளனர். நீ யூனிபார்மல இருக்கே இல்லைன்னா உன்னை உதைப்பேன் என்று பயணி ஆவேசமாக கூறவே அந்த எஸ்.ஐ எழுந்து நின்று கொண்டார். ‘சாரி... சாரி' என்று பலமுறை மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் முழுவதையும், பின்னால் அமர்ந்திருந்த ஒரு பயணி கைபேசியில் வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட்டார். இதைப் பார்த்த பல லட்சம் பேர், மற்றவர்களுக்கும் பகிர்ந்தனர். இதனை பார்வையிட்ட பலரும் அந்த சப்.இன்ஸ்பெக்டருக்கும், கண்டக்டருக்கும் எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே போதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.எஸ்.ஐ.யிடம் துறை ரீதியான விசாரணை நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறியுள்ளார். விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளா.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications